ஒவ்வொரு மனிதனுக்கும் லட்சக் கணக்கில் சம்பளம் வாங்க வேண்டும் என்ற ஆசை இருக்கும் அது சிலருக்குத் தான் சாத்தியம். அப்படிச் சாத்தியமான சிலரும் நன்கு படித்தவர்களாகத் தான் பெரும்பாலும் இருப்பார்கள் ஆனால் இங்குப் படிக்காதவர்களுக்கு லட்சக் கணக்கில் சம்பாதிக்கும் ஒரு வாய்ப்பு கிடைத்துள்ளது.
ரூ29 லட்சம் சம்பளம்
லண்டன் நைட்பிரிட்ஜ் என்ற பகுதியில் வசித்து வரும் ஒரு தம்பதி தாங்கள் வளர்க்கும் இரண்டு நாய்களைப் பராமரிக்க ஆட்களைத் தேடி வருகின்றனர். அதற்காக வேலைக்கு வருபவர்களுக்கு அவர்கள் ஆண்டிற்கு இந்திய மதிப்பில் ரூ29 லட்சம் சம்பளமாகத் தரவுள்ளதாக அறிவித்துள்ளனர்.
கோல்டன் ரேட்ரிவர்
இது குறித்து வெளியான செய்திகளின் படி அந்த தம்பியில் கோல்டன் ரேட்ரிவர் இனத்தைச் சேர்ந்த இரண்டு நாய்கள் உள்ளது. அவர்கள் வீட்டில் அந்த நாயை வளர்த்து வரும் சூழ்நிலையில் இருவரும் பணி காரணமாக வீட்டில் நேரம் செலவிட முடியவில்லை. அதனால் இரண்டு நாய்களையும் கவனித்துக்கொள்ள ஆட்களைத் தேடி வருகின்றனர்.