வெங்காயம் வாங்கலீயோ... வெங்காயம்...! விலை ஒரு ஆதார் கார்டுதாம்மா.... பொழுது போனா கிடைக்காது

உ.பி மாநிலத்தில் ஆதார் கார்டிற்காக வெங்காயம் விற்பனை செய்யப்படுகிறது. இந்த செய்தி சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.


தற்போது இந்தியா முழுவதும் வெங்காய தட்டுப்பாடு அதிகரித்துள்ளது. இதனால் வெங்காயத்தின் விலை எல்லோரையும் கண்ணீர் விட வைத்துள்ளது. முக்கியமாக வட இந்தியாக்களின் வெங்காயம் விலை தங்கவிலை போல நாளுக்கு நாள் மாற்றமடைந்து வருகிறது.


இந்நிலையில் உ.பி மாநிலம் வாரணாசியில் சமாஜ்வாதி கட்சியைச் சேர்ந்த இளைஞரணி தொண்டர்கள் சிலர் தங்கள் கடைகளில் வெங்காயத்திற்கு லோன் வழங்கி வருகின்றனர்.


அதாவது ஒருவருக்கு வெங்காயம் வேண்டும் என்றால் அவர்கள் தங்கள் ஆதார் காரடையோ அல்லது வெள்ளி பொருட்களையோ அடகு வைத்து வெங்காயம் வாங்கிக்கொள்ளும் வழிமுறையை அவர்கள் நடத்தி வருகின்றனர்.

இது தற்போது வைரலான செய்தியாக மாறியுள்ளது. தற்போது இந்த வெங்காயம் குறித்து அரசியல் கட்சியில் அதிகம் பேசிவரும் நிலையில் சிலர் வெங்காயத்தை வைத்து போராட்டத்திலும் குதித்து வருகின்றனர். அதன் ஒரு கட்டமாக வெங்காயத்தை லாக்கரில் வைத்துப் பாதுகாக்கும் சம்பவங்களும் ஆங்காங்கே நடந்து வருகிறது.