27 மாவட்டங்களில் ஊரக பகுதிகளுக்கு மட்டும் தான் தேர்தல் நடந்துள்ளது என்று தெரிவித்தார்

தொடர்ந்து பேசிய அவர், மீதமுள்ள 9 மாவட்டம், மற்றும் நகராட்சி, மாநகராட்சிக்கு தேர்தல் நடந்தால், அதில் திமுக தனித்துவமான வகையில் (Distinction) வெற்றி பெறும் என்று, மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

இதற்கு பதிலளித்த முதலமைச்சர், எஞ்சியுள்ள 9 மாவட்ட உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக தான் மகத்தான வெற்றி பெறும் என்றும் உறுதிபடத் தெரிவித்தார்.

காரசாரமான இந்த விவாதம் வரப்போகும் தேர்தல் குறித்த எதிர்பார்ப்பை மேலும் அதிகரிக்கும் விதமாக அமைந்துள்ளது.