விஜய் வீட்டில் விடிய, விடிய ஐடி ரெய்டு: துருவித் துருவி கேள்வி கேட்கும் அதிகாரிகள்

விஜய் வீட்டில் விடிய, விடிய வருமான வரித்துறை சோதனை நடந்துள்ளது.


பட விவகாரம் தொடர்பாக ஏஜிஎஸ் சினிமாஸுக்கு சொந்தமான 20 இடங்கள், சினிமா பைனான்சியர் அன்புச்செழியனின் வீட்டில் நேற்று வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி கணக்கில் வராத ரூ. 24 கோடி ரொக்கம், தங்க நகைகளை பறிமுதல் செய்தனர்.\


இதைத் தொடர்ந்து மாஸ்டர் படப்பிடிப்பில் நெய்வேலியில் இருந்த விஜய்யை வருமான வரித்துறையினர் சென்னைக்கு அழைத்து வந்தனர். இரவு 9 மணிக்கு விஜய்யுடன் சென்னை வந்து சேர்ந்தார்கள்.

சென்னை சாலிகிராமம், நீலாங்கரை மற்றும் பனையூரில் உள்ள விஜய்யின் வீடுகளில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினார்கள். அதில் பனையூர் வீட்டில் விடிய, விடிய சோதனை நடந்துள்ளது. விஜய் வீட்டில் 8 அதிகாரிகள் தொடர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.